பெரிய வெற்றிடத்தையே உணர்கிறேன் - ‘அனிமல்’ ஷூட்டிங் குறித்து நடிகை ராஷ்மிகா கருத்து !
50 நாட்கள் படப்பிடிப்பு நிறைவுபெற்றதும் பெரிய வெற்றிடத்தையே உணர்கிறேன் என்று நடிகை ராஷ்கா மந்தனா தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியாவில் நேஷ்னல் க்ரிஷ் நடிகையாக இருப்பவர் ராஷ்மிக மந்தனா. ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற அவர், தற்போது தெலுங்கு, இந்தி, தமிழ் என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது நடித்து வரும் பாலிவுட் திரைப்படம் ‘அனிமல்’.
இந்த படத்தில் கதாநாயகனாக ரன்வீர் கபூர் நடித்து வருகிறார். ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் மூலம் கவனம்பெற்ற இயக்குனர் சந்தீப் ரெட் வங்கா இந்த படத்தை இயக்கி வருகிறார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. அதில் நடிகை ராஷ்மிகா தனது பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், படப்பிடிப்பு குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், அனிமல் படத்தின் படப்பிடிப்பை முடித்து நேற்றிரவு ஐதராபாத் திரும்பிவிட்டேன். தற்போது ‘புஷ்பா 2’ படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளேன். ‘அனிமல்’ படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. முதலில் படத்திற்காக அழைத்தபோது ஆச்சரியமாக இருந்தது. இந்த படக்குழுவினருடன் பணியாற்றவேண்டும் என்பது நான் விரும்பியது. 50 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு நடித்தேன்.
தற்போது படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதால் ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை உணர ஆரம்பித்திருக்கிறேன். இந்த படக்குழுவினருடன் பணியாற்றியதை மறக்கமுடியாது. மொத்த படக்குழுவினரும் எனது மனதுக்கு நெருக்கமானவர்கள். ஆயிரம் முறை அவர்களுடன் பணியாற்ற வேண்டும் ஆசை உள்ளது. ரன்பீர் கபூருடன் பணியாற்றுவதற்கு முன்பு பதற்றமாக இருந்தது. ஆனால் அவர் நல்ல மனிதர். இந்த படப்பிடிப்பை என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக மாற்றிய படக்குழுவினருக்கு நன்றி என்று கூறியுள்ளார்.