வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தங்களா... நிலவொளியில் மின்னும் டாப்ஸி!
Updated: Dec 21, 2021, 18:46 IST
நடிகை டாப்ஸி லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன.
டாப்ஸி தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக முன்னேறியுள்ளார். பாலிவுட் தவிர தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் பெண் மையக் கதாபாத்திரங்கள் கொண்ட படங்களிலே அதிகம் நடித்து வருகிறார். மேலும் Outsider FIlms என்ற சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தையும் டாப்ஸி துவங்கியுள்ளார்.
டாப்ஸி தற்போது தமிழில் ஜெயம் ரவி உடன் ஜன கண மன படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஏலியன் என்ற புதிய தமிழ் படத்திலும் அவர் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
டாப்ஸி அரிதாகவே போட்டோஷூட் நடத்துவதுண்டு. தற்போது டாப்ஸி வெளியிட்டுள்ள போட்டோஷூட் இணையத்தைக் கலக்கி வருகின்றன.