×

ஓடிடியில் ரிலீசாகும் டாப்ஸியின் 'ராஷ்மி ராக்கெட்'.. ரிலீஸ் எப்போது தெரியுமா ? 

 

டாப்ஸியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராஷ்மி ராக்கெட்‘, ஓடிடியில் எப்போது ரிலீசாகவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியில் முன்னணி நடிகையாக இருப்பவர் டாப்ஸி. அவர் நடிப்பில் வெளியான பட்லா, கேம் ஓவர், மிஷன் மங்கள், சாந்த் கி ஆன்க்', ‘தப்பட்’  ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் டாப்ஸி,  'ஹசீனா தில்ருபா', 'ராஷ்மி ராக்கெட்'  ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளது. 

இதில் ஆகர்ஷ் குரானா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராஷ்மி ராக்கெட்’.  பிரபல தமிழ் இயக்குனர் நந்தா பெரியசாமி, இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். இந்தப் படத்தில் டாப்ஸியுடன் அபிஷேக் பேனர்ஜி, ப்ரியன்ஷு, சுப்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.  ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்,  எப்படி தடகள வீராங்கனையாக மாற போராடுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. 

இந்நிலையில் இந்த படம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அதன்படி இந்த படம் ‘ஜீ5’ ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது. அக்டோபர் 2வது வாரத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இப்படம் பெரிய தொகை விற்பனை செய்யப்பட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. தற்போது டாப்ஸி கைவசம் `ரன் ரோலா ரன்' பட இந்தி ரீமேக், மித்தாலி ராஜ் பயோ பிக் 'சபாஷ் மித்து' ஆகிய படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.