×

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் மௌனப் படத்தில் கதாநாயகியாக இணையும் அதிதி ராவ் !

 

விஜய் சேதுபதி படத்தில் நடிகை அதிதி ராவ் ஹைதாரி கதாநாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. 

விஜய் சேதுபதி இந்தியில் காந்தி டாக்ஸ் என்ற சத்தமில்லா படத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.  இந்தப் படத்தை கிஷோர் பாண்டுரங் பேலேகர் இயக்குகிறார். ந்த படம் இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட ஆறு மொழிகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். 

தற்போது இந்தப் படத்தில் நடிகை அதிதி ராவ் ஹைதாரி கதாநாயகியாக இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அதிதி விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் படத்தில் நடிக்க வேண்டியது.

ஆனால் அந்தப் படத்தில் அவர் நடிக்கவில்லை. தற்போது இருவரும் இணைந்து காந்தி டாக்ஸ் படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படம் மவுனப் படமாக உருவாக உள்ளது. படத்தில் வசனங்கள் இல்லாமல் அமைதிப் படமாக உருவாக உள்ளது. 

விஜய் சேதுபதி ஏற்கனவே மாநகரம் படத்தின் இந்தி ரீமேக் ஆன மும்பைக்கார் படத்தில் நடித்துவருகிறார். மேலும் ஷாஹித் கபூர் நடிப்பில் உருவாகி வரும் புதிய வெப் சீரிஸிலும்  நடித்து வருகிறார். தற்போது காந்தி டாக்ஸ் படத்திலும் நடிக்க உள்ளார்.