×

அக்ஷய் குமாரை அடுத்து படப்பிடிப்பில் கலந்துகொண்ட 45 நடிகர்களுக்கு கொரோனா பாதிப்பு!

நடிகர் அக்ஷய் குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரது படப்பிடிப்பில் கலந்துகொண்ட 45 துணை நடிகர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை மக்களை பாதிக்கத் துவங்கியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு அக்ஷய் குமார் ராம் சேது படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது ராம் சேது படத்தில் பணியாற்றிய 45 துணை
 

நடிகர் அக்ஷய் குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரது படப்பிடிப்பில் கலந்துகொண்ட 45 துணை நடிகர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை மக்களை பாதிக்கத் துவங்கியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு அக்ஷய் குமார் ராம் சேது படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது ராம் சேது படத்தில் பணியாற்றிய 45 துணை நடிகர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கபட்டதை அடுத்து தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுமாறு அக்ஷய் குமார் அறிவுறுத்தியிருந்த நிலையில் தற்போது 45 நடிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.