×

லக்ஷ்மி மன்சு, டாப்ஸியை அடுத்து ரியா சக்ரபோர்த்திக்கு ஆதரவாக களமிறங்கிய வித்யா பாலன்!

ரியா சக்ரபோர்த்திக்கு ஆதரவாக ஏற்கனவே லக்ஷ்மி மஞ்சு, டாப்ஸி ஆகியோர் பேசியிருந்த நிலையில், தற்போது நடிகை வித்யா பாலனும் ரியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு தற்போது பாலிவுட்டின் மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. ஏனெனில் இந்த வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரித்து வருவதில் பல திருப்பங்கள் நிகழ்கின்றன. சுஷாந்தின் ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இந்த வழக்கில் நீதி கோருகின்றனர். பாலிவுட்டில் சிலர் சுஷாந்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி தான்இந்த வழக்கில் முக்கியக்
 

ரியா சக்ரபோர்த்திக்கு ஆதரவாக ஏற்கனவே லக்ஷ்மி மஞ்சு, டாப்ஸி ஆகியோர் பேசியிருந்த நிலையில், தற்போது நடிகை வித்யா பாலனும் ரியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு தற்போது பாலிவுட்டின் மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. ஏனெனில் இந்த வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரித்து வருவதில் பல திருப்பங்கள் நிகழ்கின்றன. சுஷாந்தின் ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இந்த வழக்கில் நீதி கோருகின்றனர்.  பாலிவுட்டில் சிலர் சுஷாந்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி தான்இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளி என்று கூறுகின்றனர். பல ஊடகங்களும் இதே கருத்தை முன் வைக்கின்றனர்.

நடிகை லக்ஷ்மி மஞ்சு இதற்காக ஊடகங்களை சாட்டியிருந்தார். இது குறித்து அவர் வெளியிட்டிருந்த பதிவில் ”
பெண்ணை மான்ஸ்டர் போல ஊடகங்கள் சித்தரித்துள்ளன. இதனால் பலர் மவுனம் காப்பதைப் பார்த்தேன். எனக்கு நடந்த உண்மை என்னவென்று தெரியாது. தெரிந்து கொள்ள விரும்புகிறேன். மிகவும் நேர்மையான வழியில் உண்மை வெளியே வருமென்று நான் நம்புகிறேன். உண்மை என்னவென்று தெரியாமல் ஒரு நபரையும், அவரது குடும்பத்தையும் தாக்கி, அவர்களுக்குத் தீமையும், கொடுமையும் செய்யாமல் இருப்போமே!

ஊடகங்களின் இந்த செயல்முறையால் அந்த மொத்தக் குடும்பமும் அனுபவிக்கும் வலியை  என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். அவரைத் தனியாக விடுங்கள். உண்மை அதிகாரப்பூர்வமாக வெளியே வரும் வரை காத்திருங்கள்.” என்று தெரிவித்திருந்தார்.