தசரா பண்டிகைக்கு வெளியாகிறது அஜய் தேவ்கனின் ‘மைதான்’ திரைப்படம்…
கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மைதான்’. சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தயாராகிவரும் இந்தப்படத்தை “பதாய் ஹோ” பட இயக்குநர் ரவீந்திரநாத் ஷர்மா இயக்குகிறார். மேலும், பிரியாமணி,கஜ்ராஜ் ராவ் மற்றும் பெங்காலி நடிகர் ருத்ரனில் கோஷ் ஆகியோர் முக்கிய
கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே லக்னோ, கொல்கத்தா மற்றும் மும்பை பகுதிகளில் நடத்தப்பட்டு 65% படமாக்கப்பட்டுவிட்டது . இறுதிகட்ட படப்பிடிப்புக்கு தயாரான நிலையில் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்து முடக்கிப்போட்டுவிட்டது.இந்நிலையில் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பை வரும் ஜனவரி மாதம் தொடங்க படக்குழு முடிவுசெய்துள்ளது.
அதோடு ஏப்ரல் மாதத்திற்குள் ஷூட்டிங்கை முடிக்கவும் திட்டமிட்டுள்ளனர். படத்தில் மிக அதிகமான விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் உள்ளன. ஏற்கனவே லண்டன், கனடா மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிகளில் அதற்கான வேலைகள் நடைபெற்று வரும் சூழலில், பணிகள் முடிய காலதாமதம் ஆகும் என்பதால் படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது ‘மைதான்’ படம் தசரா பண்டிக்கை ட்ரீட்டாக அடுத்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.