சுஷாந்த் இறப்பு குறித்து இறுதியாக மௌனம் களைத்த அக்ஷய் குமார்!
பாலிவுட்டில் சுஷாந்த் மரணத்தில் ஆரம்பித்த சர்ச்சை தற்போது போதைப்பொருள் வழக்கில் வந்து நிற்கிறது. பாலிவுட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்களின் பெயர்கள் கூட போதைப்பொருள் விவகாரத்தில் வெளியாகி வருகின்றன.
இந்த சர்ச்சைகள் குறித்து மிகப்பெரிய நடிகர்கள் யாரும் கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தனர். தற்போது நடிகர் அக்ஷய் குமார் இந்த விவகாரங்கள் குறித்து மௌனம் கலைத்துள்ளார். பாலிவுட்டில் போதைப்பொருள் குறித்து அவர் பேசிய வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் “இன்று, நான் உங்களுடன் கனமான இதயத்துடன் பேசுகிறேன். கடந்த சில வாரங்களாக நான் பல விஷயங்களை உங்களிடம் சொல்ல விரும்பினேன். ஆனால் எல்லா இடங்களிலும் எதிர்மறை நிரம்பிக் கிடக்கிறது..
“நாங்கள் நட்சத்திரங்கள் என்று அழைக்கப்படலாம், ஆனால் உங்கள் அன்பினால் தான் பாலிவுட் உருவாக்கப்பட்டது. இது வெறும் ஒரு தொழில் மட்டுமல்ல, எங்கள் படங்களின் மூலம் இந்தியாவின் மதிப்புகள் மற்றும் கலாச்சாரத்தை உலகம் முழுவதும் வெளிப்படுத்தியுள்ளோம்” .
“திரைத்துறையில் போதைப்பொருள் பயன்பாடு இல்லை என்று நான் சொன்னால் அது நிச்சயமாக பொய்யாகத் தான் இருக்கும். மற்ற துறைகளைப் போலவே இங்கும் உள்ளது. ஆனால் ஒவ்வொரு தொழிலிலும் உள்ள ஒவ்வொரு நபரும் இதுபோன்ற பிரச்சினைகளில் ஈடுபடவில்லை. அது சாத்தியமில்லாதது.
View this post on InstagramA post shared by Akshay Kumar (@akshaykumar) on Oct 3, 2020 at 4:48am PDT
“போதைப்பொருள் விவகாரம் சட்டபூர்வமான அணுகப்படவேண்டிய விஷயம், நம் அமலாக்க அதிகாரிகளும் நீதிமன்றங்களும் இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணையை நடத்துவார்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இந்த விசாரணையில் திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒவ்வொரு நபரும் அவர்களுடன் ஒத்துழைப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். திரைத்துறையைச் சேர்ந்த அனைவரையும் தவறானவர்கள் என்று பார்க்க வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள். அப்படி செய்வது சரியல்ல.” என்று தெரிவித்துள்ளார்.