×

 மிரட்டும் ஆலியா பட்டின் ‘கங்குபாய் கொத்தேவாலி’... 100 கோடி கிளப்பில் இணைந்ததால் படக்குழு மகிழ்ச்சி !

 

ஆலியா பட் நடிப்பில் உருவாகி வெளியான ‘கங்குபாய் கொத்தேவாலி’ திரைப்படம் வசூல் சாதனை படைத்துள்ளது. 

மும்பை காமாட்டிபுராவில் கோலோச்சிய கங்குபாய் கொத்தேவாலி என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம்  ‘கங்குபாய் கொத்தேவாலி’. பிலபர பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் போன்ற படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ளார். 

இந்த படம் கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆலியா பட் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

சூப்பர் ஹிட்டடித்துள்ள இப்படம் வசூல் மழையில் நனைந்து வருகிறது. பல சிக்கல்களை சந்தித்த இப்படம் வெளியான சில நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.