×

"வெறுப்புகள் பற்றி எனக்கு கவலை இல்லை,டீசரை டிஸ்லைக் செய்த அனைவருக்கும் நன்றி …" -அலியா பட்

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்தியில் வாரிசு நடிகர், நடிகைகளுக்கு எதிராக ரசிகர்கள் குரல் கொடுத்து புறக்கணித்து வருகிறார்கள். இந்த நிலையில் வாரிசு நடிகையான அலியாபட் நடித்துள்ள சடக் 2 படத்தின் டிரெய்லருக்கு, வலைத்தளத்தில் 80 லட்சத்துக்கும் மேலானோர் வெறுப்பை பதிவு செய்துள்ளனர். இந்த படத்தை அலியாபட்டின் தந்தை மகேஷ்பட் இயக்கி உள்ளார். திரைப்பட வரலாற்றில் எந்த டிரைலரும் இந்த அளவுக்கு எதிர்ப்பை பெறவில்லை. அலியாபட் தனது காதலர் ரன்பீர் கபூருடன் இணைந்து நடிக்கும்
 

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்தியில் வாரிசு நடிகர், நடிகைகளுக்கு எதிராக ரசிகர்கள் குரல் கொடுத்து புறக்கணித்து வருகிறார்கள். இந்த நிலையில் வாரிசு நடிகையான அலியாபட் நடித்துள்ள சடக் 2 படத்தின் டிரெய்லருக்கு, வலைத்தளத்தில் 80 லட்சத்துக்கும் மேலானோர் வெறுப்பை பதிவு செய்துள்ளனர். இந்த படத்தை அலியாபட்டின் தந்தை மகேஷ்பட் இயக்கி உள்ளார்.

 
திரைப்பட வரலாற்றில் எந்த டிரைலரும் இந்த அளவுக்கு எதிர்ப்பை பெறவில்லை. அலியாபட் தனது காதலர் ரன்பீர் கபூருடன் இணைந்து நடிக்கும் பிரம்மாஸ்த்ரா, அமிதாப்பச்சன், ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கும் புதிய படம், ராஜமவுலி இயக்கத்தில் நடிக்கும் ஆர் ஆர் ஆர் ஆகிய படங்களையும் ரசிகர்கள் புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளதால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆர் ஆர் ஆர் படத்தில் அலியாபட் காட்சிகள் இன்னும் படமாகவில்லை என்பதால் அவரை நீக்கி விடலாமா என்று யோசிக்கின்றனர்.

இதற்கு அலியாபட், “வெறுப்பு குறித்து எனக்கு கவலை இல்லை. விரும்புகிறவர்களும் வெறுப்பவர்களும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள். எனது பட டிரெய்லரை டிரெண்ட் செய்ததால் அவர்களை பாராட்ட வேண்டும்” என்று கூறியுள்ளார்.