பிரபலங்கள் வீட்டு குழந்தைகளுக்கு பரிசளித்து நிறுவனத்தை விளம்பரப்படுத்தும் பாலிவுட் நடிகை!
நடிகர் துல்கர் சல்மான் மகளுக்கு பாலிவுட் நடிகை ஆலியா பட் தனது நிறுவனத்தின் தயரிப்புகளை பரிசாக அளித்துள்ளார்.
பாலிவுட் நடிகை ஆலியா பாட் ‘Ed-a-Mamma’ என்ற பெயரில் குழந்தைகளுக்கான ஆடைகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றைத் துவங்கியுள்ளார். அதில் இரண்டு முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தேவையான ஆடைகள் கிடைக்கும். தனது நிறுவனத்தை விளம்பரப்படுத்தும் வகையில் பல பிரபலங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு தனது நிறுவனத்தின் ஆடைகளை பரிசாக அனுப்பி வருகிறார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு நடிகர் மகேஷ் பாபுவின் மகள் சிதாராவுக்கு தனது நிறுவனத்தின் ஆடைகளை அனுப்பி மகிழ்வித்தார். அந்தவகையில், தற்போது நடிகர் துல்கர் சல்மானின் மகள் மரியம் அமீராவுக்கு ஆடைகள் பரிசாக அனுப்பியுள்ளார்.
அதில் “மரியம் நான் அனுப்பிய இந்தப் பரிசுகளை நான் நேசிப்பது போலவே நேசிப்பார் என்று நம்புகிறேன். அன்புடன் ஆலியா” என்றும் தெரிவித்துள்ளார்.
ஆலியா பாட் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் படம் ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.ஹிந்தியில் ‘பிரம்மாஸ்திரம்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.