×

பிரபல பாலிவுட் நடிகைக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பாட் தான் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்று தான் கூறவேண்டும். கொரோனா பரவல் ஆரம்பித்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் அதன் ஆட்டம் முடிந்த பாடில்லை. பொதுமக்கள் மட்டுமல்லாமல் முக்கியப் பிரபலங்கள் பலரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது பாலிவுட் நடிகை ஆலியா பாட் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில்
 

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பாட் தான் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்று தான் கூறவேண்டும். கொரோனா பரவல் ஆரம்பித்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் அதன் ஆட்டம் முடிந்த பாடில்லை. பொதுமக்கள் மட்டுமல்லாமல் முக்கியப் பிரபலங்கள் பலரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது பாலிவுட் நடிகை ஆலியா பாட் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் “அனைவருக்கும் வணக்கம், எனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. நான் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். வீட்டில் சுய தனிமையில் இருப்பேன். எனது மருத்துவர்களின் ஆலோசனைப்படி, நான் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றுகிறேன். உங்கள் எல்லா அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள், கவனமாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ஆலியாவின் காதலர் ரன்பிர் கபூர் சில வாரங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு இரண்டு தினங்களுக்கு முன்பு தான் அவர் குணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. தற்போது ஆலியா பாட் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.