×

சல்மான் கான் பாராட்டால் நெகிழ்ந்த அல்லு அர்ஜுன்!

சல்மான் கான் நடிப்பில் பிரபு தேவா இயக்கத்தில் வெளியாகவிருக்கும் ‘ராதே’ படத்திலிருந்து சீட்டிமார் என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடல் ஏற்கனவே அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘துவ்வாட ஜெகந்நாதம்’ என்ற படத்தில் இடம் பெற்றிருந்தது. அந்தப் பாடலில் அல்லு அர்ஜுனின் நடனம் மிகவும் சிறப்பாக இருக்கும். அதனால் அந்தப் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது ‘சீட்டிமார்’ பாடல் மீண்டும் உருவாக்கப்பட்டு சல்மான் கானின் ராதே படத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மீண்டும்
 

சல்மான் கான் நடிப்பில் பிரபு தேவா இயக்கத்தில் வெளியாகவிருக்கும் ‘ராதே’ படத்திலிருந்து சீட்டிமார் என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடல் ஏற்கனவே அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘துவ்வாட ஜெகந்நாதம்’ என்ற படத்தில் இடம் பெற்றிருந்தது. அந்தப் பாடலில் அல்லு அர்ஜுனின் நடனம் மிகவும் சிறப்பாக இருக்கும். அதனால் அந்தப் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது ‘சீட்டிமார்’ பாடல் மீண்டும் உருவாக்கப்பட்டு சல்மான் கானின் ராதே படத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மீண்டும் அந்தப் பாடலை உருவாக்கியுள்ளார். இன்று ராதே படத்தில் இடம் பெற்றுள்ள சீட்டிமார் பாடல் வெளியாகியுள்ளது.

அதையடுத்து சல்மான் கான் அல்லு அர்ஜுனின் நடனத் திறமையைப் பாராட்டி அவருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

பாடல் இணைப்பைப் பகிர்ந்துகொண்டு, சல்மான் கான் எழுதினார், “சீட்டிமார் பாடலுக்காக நன்றி அல்லு அர்ஜுன். அந்தப் பாடலில் உங்களின் பெர்பார்மன்ஸ் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உங்கள் நடனம், உங்கள் ஸ்டைல் எல்லாம் சிறப்பாக இருந்தது. பாதுகாப்பாக இருங்கள்.” என்று தெரிவித்துள்ளார். சல்மான் கானின் இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

சல்மானின் ட்வீட்டுக்கு பதிலளித்த அல்லு அர்ஜுன் “மிக்க நன்றி சல்மான் காரு. உங்களிடமிருந்து பாராட்டு பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரு இனிமையான செயல். ராதே படத்தில் உங்களின் கைவண்ணத்தில் சீட்டிமார் பாடலைக் காண விரும்புகிறேன். உங்களின் அன்பிற்கு நன்றி” என்று பதிலளித்துள்ளார்.

ராதே திரைப்படம் மே 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதே சமயம் ZEE PLEX ஓடிடி தளத்திலும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.