×

பாலிவுட் நடிகர் ஷாரூக்கானுடன் இணையும் அட்லி… புதிய படத்தின் அப்டேட் வெளியானது…

ஷாரூக்கானை வைத்து புதிய படத்தை இயக்குனர் அட்லி இயக்கவுள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. ‘ராஜா ராணி’ என்ற படத்தை இயக்கி முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தவர் அட்லி. இந்த வெற்றியை தொடர்ந்து விஜய்யுடன் கூட்டணி சேர்ந்து ‘தெறி’ படத்தை இயக்கினார். இந்த படமும் வெற்றி பெறவே மெர்சல், பிகில் என அடுத்தடுத்த விஜய் படங்களை இயக்கி மாபெரும் வெற்றிப்பெற்றார். இதையடுத்து விஜய்யின் 66-வது படத்தையும் அட்லி இயக்கப்போவதாக தகவல் பரவி வருகிறது. இதனிடையே பிகில் படத்தை முடித்தபின்
 

ஷாரூக்கானை வைத்து புதிய படத்தை இயக்குனர் அட்லி இயக்கவுள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

‘ராஜா ராணி’ என்ற படத்தை இயக்கி முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தவர் அட்லி. இந்த வெற்றியை தொடர்ந்து விஜய்யுடன் கூட்டணி சேர்ந்து ‘தெறி’ படத்தை இயக்கினார். இந்த படமும் வெற்றி பெறவே மெர்சல், பிகில் என அடுத்தடுத்த விஜய் படங்களை இயக்கி மாபெரும் வெற்றிப்பெற்றார். இதையடுத்து விஜய்யின் 66-வது படத்தையும் அட்லி இயக்கப்போவதாக தகவல் பரவி வருகிறது.

இதனிடையே பிகில் படத்தை முடித்தபின் பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை மும்பைக்கு சென்று சந்தித்தார் அட்லி. அப்போது தன்னிடம் உள்ள கதையை, ஷாரூகானிடம் அட்லி கூறியதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த கதையில் அவருக்கு திருப்தியில்லை என்றும், வேறு கதையை ரெடி செய்ய சொன்னதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை வைத்து புதிய படத்தை அட்லி இயக்க உள்ளார். ஷாரூக்கான் படத்தை அட்லி இயக்குவாரா, இல்லை படத்தை கைவிட்டாரா என சமூக வலைத்தளங்களில் இரண்டு வருடங்களாக தகவல் பரவி வந்த நிலையில், தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது. அட்லி இந்த படத்தின் முதற்கட்ட பணிகளை துவங்கிவிட்டதாகவும், வரும் ஆகஸ்ட்டில் ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஷாரூக்கான் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஷாரூக்கான், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் பதானின் ஷூட்டிங்கில் பிசியாக உள்ளார். இந்த படத்தை முடிந்து அட்லி படத்தில் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது.