அமிதாப் பச்சன் படத்தை எந்த ஓடிடி-களிலும் வெளியிட தடை… நீதிமன்றம் உத்தரவு!
அமிதாப் பச்சன் நடித்துள்ள புதிய திரைப்படம் பதிப்புரிமை மீறல் காரணமாக வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ‘ஜுண்ட்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் நாகராஜ் மஞ்சுலே இயக்கியுள்ள இந்தப் படம் கால்பந்து வீரர் அகிலேஷ் பால் என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இருந்தாலும் இப்படத்தில் பதிப்புரிமை மீறல்கள் இருப்பதாக தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
வழக்கு பதிவு செய்த மனுதாரர், கால்பந்து வீரர் அகிலேஷ் பால் ஏமாற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அகிலேஷிடம் பதிப்புரிமை முறையாக பெறப்பட்டுள்ளதாக படக்குழு கூறியுள்ளனர்.
வழக்கு விசாரணையில் படத்தில் பதிப்புரிமை விதிமீறல்கள் இருப்பதாக இந்தியா, வெளிநாடு மற்றும் OTT தளங்களில் ஜுண்ட் படம் வெளியிடப்படுவதை முழுமையாக நிறுத்த உத்தரவிட்டுளளது. றார்.