அர்ஜுன் தாஸ் மிரட்டும் அந்தகாரம் படத்தின் ம்யூசிக்கல் டீசர் வெளியாகியது!
நடிகர் அர்ஜுன் தாஸின் ‘அந்தகாரம்’ படத்தின் ம்யூசிக்கல் டீசர் வெளியாகியுள்ளது.
கைதி படத்தில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், வி விக்னராஜன் என்பவர் இயக்கத்தில் ‘அந்தகாரம்’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். வினோத் கிஷானும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இயக்குனர் அட்லீ இந்தப் படத்தை வெளியிடுகிறார். ஜெயராம், பிரியா அட்லீ மற்றும் கே பூர்ணா சந்திரா ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரைலருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது ‘அந்தகாரம்’ படத்தின் ம்யூசிக்கல் ட்ரைலர் வெளியாகியுள்ளது. விறுவிறுப்பான காட்சிகளுடன் டீசர் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
‘அந்தகாரம்’ படம் நெட்ஃபிலிக்ஸில் நவம்பர் 24-ம் தேதி வெளியாக உள்ளது.