×

வேட்டையை துவங்கிய ‘அனிமல்’!- இரண்டாம் நாள் வசூல்.

 

ரன்பீர் கபூரின் அதிரடி நடிப்பில் வெளியான ‘அனிமல்’ படத்தின் இரண்டாம் நாள் வசூல் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

அர்ஜுன் ரெட்டிபடம் மூலமாக கவனம் ஈர்த்த இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘அனிமல்’. இந்தப்படத்தை பத்ரகாளி  பிக்சர்ஸ் தயாரிப்பில், டி-சிரீஸ் வழங்கியுள்ளனர். படத்தில் அனில் கபூர், சுரேஷ் ஓப்ராய், ராஷ்மிகா மந்தனா என நடித்துள்ளனர். படத்திற்கு மனன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.

சுமார் 3 மணிநேரம் 21 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்ட இந்த படம் ஒரு புறம் படம் நல்ல விமர்சனத்தை பெற்றாலும் மற்றொரு புறம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதிலும் பெரும்பாலும் இரண்டாவது பாதியை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் படம் முதல் நாளில் ரூ.116 கோடி வசூலித்தது, அதில் இந்தி மொழியில் மட்டும் ரூ.54.75 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இரண்டாவது நாளில் படம் ரூ.236 கோடி வசூலித்துள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.