பாக்ஸ் ஆபீஸ் சுனாமி!.....- விரைவில் 500 கோடி கிளப்பில் இணையும் ‘அனிமல்’.
ரன்பீர் கபூரின் அதிரடி நடிப்பில் வெளியான ‘அனிமல்’ படத்தின் மூன்று நாட்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரிப்பில், டி-சிரீஸ் வழங்கியுள்ள படம் ‘அனிமல்’. இந்தப்படத்தை ‘அர்ஜுன் ரெட்டி’ படம் மூலமாக கவனம் ஈர்த்த இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார். படத்தில் அனில் கபூர், சுரேஷ் ஓப்ராய், ராஷ்மிகா மந்தனா என நடித்துள்ளனர். படத்திற்கு மனன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார். சுமார் 3 மணிநேரம் 21 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்ட இந்த படம் ஒரு புறம் படம் நல்ல விமர்சனத்தை பெற்றாலும் மற்றொரு புறம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதிலும் பெரும்பாலும் இரண்டாவது பாதியை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் படம் நேற்று ரூ.236 கோடி வசூலித்த நிலையில் மூன்று நாட்களை சேர்த்து மொத்தமாக ரூ. 356 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளனர். விரைவில் படம் 500 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.