×

சர்தேவச அளவில் பிரியங்கா சோப்ராவின் மற்றுமொரு சாதனை

பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் நுழைந்து இதோடு 20 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. படங்களில் மட்டுமில்லாமல் நிஜ வாழ்விலும் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தி காட்டியிருக்கிறார். அனைத்திற்கும் அவரது கடின உழைப்புதான் காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தென்னிந்திய நடிகை, பாலிவுட் நடிகை என்று இருந்த அவர் இப்போது சர்வதேச நடிகையாக உருவெடுத்துள்ளார். தற்போது அவர் டொரோண்டோ திரைப்பட விழாவில் என பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார். “எனது ஒட்டுமொத்த சினிமா வாழ்க்கையில் டொரண்டோ விருது விழா தான் எனது இரண்டாவது வீடாக
 

பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் நுழைந்து இதோடு 20 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. படங்களில் மட்டுமில்லாமல் நிஜ வாழ்விலும் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தி காட்டியிருக்கிறார். அனைத்திற்கும் அவரது கடின உழைப்புதான் காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தென்னிந்திய நடிகை, பாலிவுட் நடிகை என்று இருந்த அவர் இப்போது சர்வதேச நடிகையாக உருவெடுத்துள்ளார். தற்போது அவர் டொரோண்டோ திரைப்பட விழாவில் என பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார்.

“எனது ஒட்டுமொத்த சினிமா வாழ்க்கையில் டொரண்டோ விருது விழா தான் எனது இரண்டாவது வீடாக இருந்து வருகிறது. இந்த விழாவில் தான் என்னுடைய படங்களின் நிறைய தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களை நான் சந்தித்தேன். இந்த விருது விழாவில் நிறைய திறமை சாலிகள் உருவாகியுள்ளனர். உலகில் மூலை முடுக்குகளில் இருக்கும் அனைத்து திறமைகளும் கண்டெடுக்கப்பட்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கி அவர்களுக்கு வளர்த்து வருவதில் டொரோண்டோ திரைப்பட விழா மிகச் சிறந்தவர்கள்.” என்று பிரியங்கா தெரிவித்துள்ளார்.


பிரியங்கா சோப்ராவுடன் சேர்த்து பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்பும் டொரோண்டோ திரைப்பட விழாவின் அம்பாசிடராக நியமிக்கப்பட்ட மற்றொரு இந்தியன் ஆவார். தற்போது பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டில் வெளியாகி ஹிட்டடித்த ‘மேட்ரிக்ஸ் சீரிஸின் நான்காவது பாகத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.