×

பும்ரா- அனுபமா பரமேஸ்வரன் ரகசியத் திருமணம்!?

நடிகை அனுபமா பரமேஸ்வரன் கிரிக்கெட் வீரர் ஜாஸ் ஜாஸ்பிரிட் பும்ராவை ரகசியமாகத் திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. நடிகை அனுபமாவும், பும்ராவும் காதலித்து வருவதாக பல நாட்களாக கூறப்பட்டு வருகிறது. அனுபமா போடும் பதிவுகளுக்கு பும்ரா கமெண்ட் அடிப்பதும், இவரது பதிவுகளுக்கு அனுபமா கருத்து தெரிவிப்பதும் என இருந்த வந்ததால் இருவரும் காதலிக்கிறார்கள் என்ற செய்திகள் தீயாய் பரவின. பின்னர் இருவரும் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று தெரிவித்தனர். தற்போது இவர்கள்
 

நடிகை அனுபமா பரமேஸ்வரன் கிரிக்கெட் வீரர் ஜாஸ் ஜாஸ்பிரிட் பும்ராவை ரகசியமாகத் திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

நடிகை அனுபமாவும், பும்ராவும் காதலித்து வருவதாக பல நாட்களாக கூறப்பட்டு வருகிறது. அனுபமா போடும் பதிவுகளுக்கு பும்ரா கமெண்ட் அடிப்பதும், இவரது பதிவுகளுக்கு அனுபமா கருத்து தெரிவிப்பதும் என இருந்த வந்ததால் இருவரும் காதலிக்கிறார்கள் என்ற செய்திகள் தீயாய் பரவின.

பின்னர் இருவரும் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று தெரிவித்தனர். தற்போது இவர்கள் இருவரும் கோவாவில் வைத்து திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.


சமீபத்தில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீட் பும்ரா இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். எனவே அவர் தனது திருமணத்திற்குத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அனுபமாவும் தான் கோவாவில் மகிழ்ச்சியான விடுமுறையைக் கொண்டாடுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் சுவாரசியமாக பும்ராவின் சொந்த ஊரான அஹமதாபாத்திற்கு அருகில் துவாரகா ஹோட்டலில் தங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளது இந்த செய்திகளை நம்பும் படியாக மாற்றுகிறது.