×

அனுராக் காஷ்யப்பிற்கு குவியும் நடிகைகள் ஆதரவு!

பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பயல் கோஷ் பாலியல் குற்றம் சுமத்தியத்தை அடுத்து பல நடிகைகள் அனுராக்கிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் அனுராக் காஷ்யப்-ம் ஒருவர். இவரது படங்கள் மிகச் சிறந்த திரைக்கதைக்காக உலகளவில் பேசப்படுபவை. சமீப காலமாக அனுராக் மீது பல குற்றசாட்டுகள் எழுந்து வருகின்றன. இவர் தெரிவிக்கும் கருத்துக்கள் பெரும்பாலானவை சர்ச்சையில் முடிகின்றன. ஏற்கனவே கங்கனா ரணாவத் மற்றும் அனுராக் இருவருக்கும் இடையே
 

பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பயல் கோஷ் பாலியல் குற்றம் சுமத்தியத்தை அடுத்து பல நடிகைகள் அனுராக்கிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் அனுராக் காஷ்யப்-ம் ஒருவர். இவரது படங்கள் மிகச் சிறந்த திரைக்கதைக்காக உலகளவில் பேசப்படுபவை. சமீப காலமாக அனுராக் மீது பல குற்றசாட்டுகள் எழுந்து வருகின்றன. இவர் தெரிவிக்கும் கருத்துக்கள் பெரும்பாலானவை சர்ச்சையில் முடிகின்றன. ஏற்கனவே கங்கனா ரணாவத் மற்றும் அனுராக் இருவருக்கும் இடையே பெரிய போரே நிகழ்ந்து வருகிறது.

தற்போது அனுராக் காஷ்யப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை பயல் கோஷ் குற்றம் சாட்டியுள்ளார். அதற்கு பதிலளித்த அனுராக், பயல் கூறும் அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை என்று தெரிவித்திருந்தார்.

இந்த சர்ச்சையை அடுத்து அனுராக் காஷ்யப்பிற்கு ஆதரவாக பல நடிகைகள் மற்றும் பெண்கள் ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

அனுராக் காஷ்யப்பின் முதல் மனைவி ஆர்த்தி பஜாஜ் அவருக்கு ஆதவராக பதிவிட்டிருந்தார். “நீங்கள் ஒரு ராக்ஸ்டார் அனுராக். தொடர்ந்து பெண்கள் அதிகாரத்தை ஊக்கப்படுத்துங்கள். அவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான இடத்தை உருவாக்குங்கள். நான் அதை முதலில் நம் மகளுடன் பார்க்கிறேன்”. என்று தெரிவித்திருந்தார்.

உங்களுக்காக, என் நண்பரே, எனக்குத் தெரிந்த மிகப்பெரிய பெண்ணியவாதி நீங்கள் தான். நீங்கள் உருவாக்கும் உலகில் பெண்கள் எவ்வளவு சக்திவாய்ந்த மற்றும் குறிப்பிடத்தக்கவர்கள் என்பதைக் காட்டும் மற்றொரு கலைத் தொகுப்பை விரைவில் காணலாம்” என்று நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை சுர்வீன் சாவ்லா

“அவர்கள் தவழட்டும்
அவர்கள் வலம் வரட்டும்
நீங்கள் என் நண்பர்
எப்போதும் போல உயர்ந்து நில்லுங்கள்
பெண்ணியத்தின் இந்த பொய்யான கொடி தாங்கிகள் ….
சந்தர்ப்பவாதம் ???
அவர்கள் உங்களைப் போன்ற ஆண்களை மதிக்க மாட்டார்கள்,
நீங்கள் உண்மையிலேயே யார் என்பதை அறிந்து கொள்ளும் அளவிற்கு அவர்களுக்கு அறிவு இல்லாததால்,
அவர்கள் எழுப்பும் கூற்றுக்கள் வினோதமாகத்தான் இருக்கும்!” என்று தெரிவித்துள்ளார்.

#Metooindia இயக்கத்தின் புனிதத்தை கவனமாகப் பாதுகாப்பது பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரின் கூட்டுப் பொறுப்பாகும் இது மிக மிக முக்கியமான இயக்கம், இது பெண்களின் கவுரவத்தைத் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடாது.” என்று பாலிவுட் இயக்குனர் அனுபவ் சின்ஹா தெரிவித்துள்ளார்.