×

கர்ப்பத்திலும் தலைகீழாக யோகா செய்து அசத்தும் அனுஷ்கா சர்மா !

உலக அளவில் ரசிகர்கள் அதிகம் விரும்பும் தம்பதிகளாக விளங்கி வருபவர்கள் கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஜோடி தான். இவர்களின் சமூக வலைதள பதிவுகளுக்கு லைக் போடுவதற்கென்றே லட்சக்கணக்கில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அந்த அளவிற்கு இவர்கள் உலக மக்களின் விருப்பமிக்கவர்கள். கடந்த 2017 ஆம் ஆண்டு மிக பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்ட இவர்கள் ,எப்போது குட்டி விராத் அல்லது அனுஷ்காவை உலகிற்கு அறிமுகம் செய்வர்? என்று இவர்களது ரசிகர்கள் காத்திருந்தனர்.
 

உலக அளவில் ரசிகர்கள் அதிகம் விரும்பும் தம்பதிகளாக விளங்கி வருபவர்கள் கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஜோடி தான்.

இவர்களின் சமூக வலைதள பதிவுகளுக்கு லைக் போடுவதற்கென்றே லட்சக்கணக்கில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அந்த அளவிற்கு இவர்கள் உலக மக்களின் விருப்பமிக்கவர்கள்.

கடந்த 2017 ஆம் ஆண்டு மிக பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்ட இவர்கள் ,எப்போது குட்டி விராத் அல்லது அனுஷ்காவை உலகிற்கு அறிமுகம் செய்வர்? என்று இவர்களது ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் அனுஷ்கா கர்ப்பம் தரித்திருப்பதை உலக மக்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவரை தொடர்ந்து வரும் ஜனவரி மாதத்தில் இருவராக உள்ள தாங்கள் மூவராக மாறிவிடுவோம் என்று ஒரே நேரத்தில் இருவரும் மகிழ்ச்சிப் பதிவை இன்ஸ்டாவில் பதிவிட்டனர்.

கர்ப்பத்திலும் அழகான கட்டுடலை அனுஷ்கா எப்படி மெயின்டைன் செய்கிறார் என்று பலருக்கும் ஒரு கேள்வி நிலவி வந்தது. இந்நிலையில் அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் தலைகீழாக நிற்பதைப்போன்ற ஒரு போட்டோவை பதிவிட்டுருந்தார். அதில் அவர் தான் கைகள் இரண்டையும் தலைக்கு கீழே பேலன்ஸ் செய்தபடி சுவர் மீது சாய்ந்து தலைகீழாக நிற்கிறார். கணவர் விராத் அவரது கால்களுக்கு உறுதுணையாக நிற்கிறார். இந்த படத்திற்கு காப்ஷென் போட்டுருக்கும் அவர் , முழு நடைமுறையையும் தனது யோகா ஆசிரியரின் மேற்பார்வையில் அதை எவ்வாறு செய்தார் என்பதையும் விளக்கியுள்ளார்.

“இந்த உடற்பயிற்சி ‘கைகளை-கீழே’ (மற்றும் கால்களை மேலே) மிகவும் கடினமான ஒன்றாகும்.யோகா என் வாழ்க்கையின் ஒரு பெரிய பகுதியாக இருப்பதால், நான் செய்து கொண்டிருந்த எல்லா ஆசனங்களையும் செய்ய முடியும் என்று என் மருத்துவர் பரிந்துரைத்தார் நான் கர்ப்பமாக இருப்பதற்கு முன்பு திருப்பங்கள் மற்றும் தீவிர முன்னோக்கி வளைவுகள், ஆனால் நிச்சயமாக பொருத்தமான மற்றும் தேவையான ஆதரவோடு. நான் பல ஆண்டுகளாக செய்து வரும் ஷிர்ஷாசனாவைப் பொறுத்தவரை, நான் சுவரை ஆதரவிற்காகப் பயன்படுத்துவதை உறுதிசெய்தேன், மேலும் எனது திறமையான கணவரும் கூடுதல் பாதுகாப்பாக இருக்க எனது சமநிலையை ஆதரிக்கிறது. இது எனது யோகா ஆசிரியர் @eefa_shrof இன் மேற்பார்வையின் கீழ் செய்யப்பட்டது, அவர் இந்த அமர்வின் மூலம் என்னுடன் மெய்நிகர். எனது கர்ப்பத்தின் மூலம் எனது பயிற்சியைத் தொடர முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ” என தெரிவித்துள்ளார்.