×

வெளியானது ஏ.ஆர்.ரகுமானின் ‘99 ஸாங்ஸ்’ டிரெய்லர்… படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிப்பு…

ஏ.ஆர்.ரகுமானின் ‘99 ஸாங்ஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இசைத்துறையில் பல சாதனைகளை செய்துள்ள ஏ.ஆர்.ரகுமான், தற்போது ‘99 ஸாங்ஸ்’ என்ற படத்திற்கு கதை எழுதி இசையமைத்துள்ளார். இந்த படத்தை விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இதில் இஹான் பட், எடில்சி வர்கீஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நேரடியாக இந்தியில் உருவான இந்தப்படம் தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் இந்த
 

ஏ.ஆர்.ரகுமானின் ‘99 ஸாங்ஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இசைத்துறையில் பல சாதனைகளை செய்துள்ள ஏ.ஆர்.ரகுமான், தற்போது ‘99 ஸாங்ஸ்’ என்ற படத்திற்கு கதை எழுதி இசையமைத்துள்ளார். இந்த படத்தை விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இதில் இஹான் பட், எடில்சி வர்கீஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நேரடியாக இந்தியில் உருவான இந்தப்படம் தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் இந்த டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளனர். இதையடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 16ம் தேதி உலகம் முழுவதும் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த படம் குறித்து பேசியுள்ள ஏ.ஆர்.ரகுமான், இந்த படத்தை ஏன் இந்தியில் எடுக்கவிலை என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழில் படத்தை எடுத்து இந்தியில் டப் செய்து வெளியிட்டால் அது தென்னந்திய படம் என்ற முத்திரை இருக்கும். ஆனால் இந்த படம் இந்தியா முழுமைக்கான படமாக இருக்கும். இந்த படத்தின் கதையும், கதையின் பின்புலமும் எல்லா இடத்திற்கு பொருந்தும் என்று தெரிவித்தார். ஏ.ஆர்.ரகுமான் முதல்முறையாக கதை எழுதி, இசையமைத்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.