×

வாயைக் கொடுத்து வம்பாக வந்து மாட்டிக்கொண்ட அக்ஷய் குமார்! வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

நடிகர் அக்ஷய் குமார் நேற்று பாலிவுட்டில் போதைப்பொருள் பற்றி பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். தற்போது அக்ஷய் அந்த வீடியோவில் பாலிவுட் நட்சத்திரங்களுக்கு சாதகமாக பேசியுள்ளார் என்று கருதி ‘லக்ஷ்மி பாம்ப்’ படத்தை தடை செய்யுமாறு ட்ரெண்ட் செய்து வருகின்றனர். பாலிவுட்டில் நடிகர் சுஷாந்த் மரணத்தில் ஆரம்பித்த சர்ச்சை பல திருப்பங்களுக்குப் பின்னர் தற்போது போதைப்பொருள் வழக்கில் வந்து நிற்கிறது. பாலிவுட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்களின் பெயர்கள் கூட போதைப்பொருள் விவகாரத்தில் வெளியாகி வருகின்றன. இதனால் இந்தியத் துறை
 

நடிகர் அக்ஷய் குமார் நேற்று பாலிவுட்டில் போதைப்பொருள் பற்றி பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். தற்போது அக்ஷய் அந்த வீடியோவில் பாலிவுட் நட்சத்திரங்களுக்கு சாதகமாக பேசியுள்ளார் என்று கருதி ‘லக்ஷ்மி பாம்ப்’ படத்தை தடை செய்யுமாறு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

பாலிவுட்டில் நடிகர் சுஷாந்த் மரணத்தில் ஆரம்பித்த சர்ச்சை பல திருப்பங்களுக்குப் பின்னர் தற்போது போதைப்பொருள் வழக்கில் வந்து நிற்கிறது. பாலிவுட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்களின் பெயர்கள் கூட போதைப்பொருள் விவகாரத்தில் வெளியாகி வருகின்றன. இதனால் இந்தியத் துறை முழுவதும் கலக்கத்தில் இருக்கிறது.

இந்த சர்ச்சைகள் குறித்து மிகப்பெரிய நடிகர்கள் யாரும் கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்த நிலையில் நேற்று நடிகர் அக்ஷய் குமார் இந்த விவகாரங்கள் குறித்து மௌனம் கலைத்தார்.

அந்த வீடியோவில் “திரைத்துறையில் போதைப்பொருள் பயன்பாடு இல்லை என்று நான் சொன்னால் அது நிச்சயமாக பொய்யாகத் தான் இருக்கும். மற்ற துறைகளைப் போலவே இங்கும் உள்ளது. ஆனால் ஒவ்வொரு தொழிலிலும் உள்ள ஒவ்வொரு நபரும் இதுபோன்ற பிரச்சினைகளில் ஈடுபடவில்லை. அது சாத்தியமில்லாதது” என்று தெரிவித்திருந்தார்.

அக்ஷய் குமாரின் இந்த கருத்தை பலர் எதிர்த்து வருகின்றனர். அக்ஷய் குமார் பாலிவுட்டில் நடக்கும் தவறுகளை மறைக்கப்பார்க்கிறார். அவர் கூறும் கருத்துக்கள் யாவும் பாலிவுட்டை காக்கும் நோக்கிலே உள்ளன என்று சுஷாந்த் ரசிகர்கள் மற்றும் மக்கள் பலரும் கூறி வருகின்றனர்.

மேலும் அக்ஷய் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள லக்ஷ்மி பாம்ப் படத்தின் ப்ரோமோஷனுக்காகத் தான் அவர் தற்போது இந்த பிரச்சினை குறித்து பேசியுள்ளார், எனவே லக்ஷ்மி பாம்ப் படத்தைத் தடை செய்யவேண்டும் என்றும் பலர் கூறிவருகின்றனர். தற்போது சமூக வலைத்தளங்களில் #BanLaxmiBomb என்ற ஹாஷ்டாக்குகள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.