“எந்த பெற்றோருக்கும் இப்படியொரு நிலை வரக்கூடாது” – பிபாஷா பாசு கண்ணீர்.
தமிழில் விஜய் நடிப்பில் வெளியான ‘சச்சின்’ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை பிபாஷா பாசு. தொடந்து இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, பெங்காலி உள்ளிடம் மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். 44 வயதான இந்த நடிகை கடந்த 2016ஆம் ஆண்டு கரண் சிங்க் குரோவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து ஆறு ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்த இந்த தம்பதிக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து ஒன்பது மாதங்கள் ஆகும் நிலையில் “எந்த பெற்றோருக்கும் இப்படியொரு நிலை வரக்கூடாது “ என கண்ணீருடன் கூறியிள்ளார் பிபாஷா.
அதாவது சமீபத்திய பேட்டி ஒன்றில்” எங்கள் முதல் குழந்தைக்காக நாங்கள் மிகவும் ஆர்வமாக இருந்தோம். பிறந்த மூன்றாவது நாளில்தான் பிறக்கும்போதே குழந்தையின் இதயத்தில் இரண்டு துளைகள் இருந்தது தெரியவந்தது. அதன் பிறகு வந்த நாட்களை கடினமாக கடந்தோம். இந்த விஷயம் குடும்பத்தில் யாருக்கும் தெரியாமல் எங்கள் மகளுக்கு சிகிச்சை கொடுத்து வந்தோம். மூன்று மாத குழந்தையானபிறகு அவளுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. சுமார் ஆறு மணி நேரம் நடந்தது. தற்போது அவள் எல்லோரையும் போல நலமுடன் இருக்கிறாள், எந்த ஒரு பெற்றோருக்கும் இப்படியொருநிலை வரக்கூடாது.” என கண்ணீருடன் கூறியுள்ளார் பிபாஷா.