×

40 லட்சம் 'டூ' 20 கோடி... ஒரே சீசன்ல 50 மடங்கு சம்பள உயர்வு பெறும் பாலிவுட் நடிகர்!

 

திரைத்துறையில் ஒரு நடிகருக்கு ஒரே ஒரு வெற்றி கிடைத்து விட்டால் போதும். அதன் பிறகு அவருக்கு படங்கள் குவிய ஆரம்பித்துவிடும். சம்பளங்கள் பல மடங்கு உயரும். இது வழக்கமான ஒன்று தான். 

பாலிவுட் நடிகர் ஜெய்தீப் அஹ்லாவத்துக்கு தற்போது அந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது. நடிகர் ஜெய்தீப் 10 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இருந்து வருகிறார். ஆனால் சிறு சிறு கதாபாத்திரங்களில் மட்டுமே காணப்பட்டு வந்தார். 

இறுதியாக, 2020 ஆம் ஆண்டு வெளியான 'பாட்டல் லோக்' என்ற வெப சீரிஸில் ஜெய்தீப் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஜெய்தீப் அந்த சீரிஸில் சிறப்பாக நடித்திருந்தார். அதற்கு அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன. 

தற்போது இந்த சீரிஸின் இரண்டாம் பாகம் உருவாகிறது. முதல் பாகத்தில் கிடைத்த வரவேற்பால் அவருக்கு முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் 50 மடங்கு அதிகம் சம்பளம் கொடுக்கப்படுகிறதாம்.

முதல் சீசனில் ஜெய்தீப் 40 லட்சம் சம்பளம் பெற்றுள்ளார். இரண்டாம் சீசனுக்கு அவரின் சம்பளம் சம்பளம் 20 கோடி. ஒரு திறமையான நடிகராக, ஜெய்தீப் இந்த ஊதியத்திற்கு முற்றிலும் தகுதியானவர். 

பாட்டல் லோக் சீசன் 2 இந்த ஆண்டின் பிற்பகுதியில் Amazon Prime வீடியோவில் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.