×

பிரபல பாலிவுட் நடிகர் மரணம்… திரையுலகினர் நேரில் அஞ்சலி

பிரபல பாலிவுட் நடிகர் ராஜிவ் கபூர் மாரடைப்பால் திடீரென மரணமடைந்துள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்து வந்தவர் ராஜிவ் கபூர். 58வயதாகும் அவர், சுக்ரியா, ஜபர்தஸ்த், லவ்வர் பாய், ஆஷ்மான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே புகழ்பெற்று இருந்தார். நடிகர், தயாரிப்பாளர், எடிட்டர், இயக்குநர் என பன்முக திறமை கொண்ட இவர், ‘பிரேம்கிராந்த்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த அவருக்கு திடீரென மாரடைப்பு
 

பிரபல பாலிவுட் நடிகர் ராஜிவ் கபூர் மாரடைப்பால் திடீரென மரணமடைந்துள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்து வந்தவர் ராஜிவ் கபூர். 58வயதாகும் அவர், சுக்ரியா, ஜபர்தஸ்த், லவ்வர் பாய், ஆஷ்மான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே புகழ்பெற்று இருந்தார். நடிகர், தயாரிப்பாளர், எடிட்டர், இயக்குநர் என பன்முக திறமை கொண்ட இவர், ‘பிரேம்கிராந்த்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் இருந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜிவ் கபூரின் மரணம், திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் உயிரிழிந்த ராஜிவ் கபூர் உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது மரணத்துக்கு பாலிவுட் திரைபிரபலங்களும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முன்னணி நடிகைகளாக கரீஷ்மா கபூர், கரீனா கபூர் உள்ளிட்டோர் ராஜிவ் கபூர் வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ராஜிவ் கபூரிரை போன்று அவரது சகோதரரும் பிரபல பாலிவுட் நடிகருமான ரிஷி கபூர் கடந்தாண்டுதான் புற்றுநோயால் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.