×

படுக்கைக்கு அழைத்த படத்தயாரிப்பாளர்… சுஷாந்த் காதலி புகாரால் அலறும் திரையுலகம்…

படத்தில் நடிப்பதற்கு தயாரிப்பாளர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை அங்கிதா லோகண்டே பகீர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகில் நடிகைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவது என்பது சகஜமாகிவிட்டது. அதுவும் சினிமாவில் புதிய வாய்ப்புகளை தேடி வரும் நடிகைகள்தான் பெரும்பாலும் இதுபோன்று பிரச்சனைகளில் சிக்குவார்கள். ஆனால் புகழ்பெற்ற நடிகைகளே பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றனர். சினிமா துறையில் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக மீ டூவில் பலர் புகார் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில்
 

படத்தில் நடிப்பதற்கு தயாரிப்பாளர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை அங்கிதா லோகண்டே பகீர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரையுலகில் நடிகைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவது என்பது சகஜமாகிவிட்டது. அதுவும் சினிமாவில் புதிய வாய்ப்புகளை தேடி வரும் நடிகைகள்தான் பெரும்பாலும் இதுபோன்று பிரச்சனைகளில் சிக்குவார்கள். ஆனால் புகழ்பெற்ற நடிகைகளே பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றனர். சினிமா துறையில் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக மீ டூவில் பலர் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது பாலிவுட் நடிகை அங்கிதா லோகண்டேவும் இந்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இவர் மணிகர்னிகா படத்தின் மூலம் நடித்து பிரபலமானவர். பாஹி 3 உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர்
அண்மையில் தற்கொலை செய்து கொண்ட இந்தி நடிகர் சுஷாந்த் சிங்கை காதலித்து வந்தார். பின்னர் கருத்து வேறுபட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர்.

இந்த புகார் குறித்து அங்கிதா லோகண்டே பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், நான் இரண்டு முறை பாலியல் தொல்லைக்கு உள்ளானேன். தயாரிப்பாளரிடம் சமரசத்துக்கு தயாராக இருந்தால்தான் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்கின்றனர். இதுவரை நான் இரண்டு முறை பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளேன். அப்படி ஒரு தயாரிப்பாளரிடம் வாய்ப்பு கேட்டு சென்றபோது படுக்கையை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று சொன்னதால் கோபமாக அந்த படத்திலிருந்து வெளியேறிவிட்டேன். இதுபோன்று சினிமாவில் பல இன்னல்களை சந்தித்து வருகின்றேன் என்று காட்டமாக கூறினார்.