×

 பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை கத்ரீனா கைஃப் திருமணம்... பிரபலங்கள் வாழ்த்து !

 

விக்கி கௌஷல் - கத்ரீனா கைஃப் திருமணம் பிரம்மாண்டமாய் நடைபெற்று முடிந்தது. 

இந்தியில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை கத்ரீனா கைஃப். இவர் நடிகர் விக்கி கௌஷலை கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தார். இதையடுத்து இவர்கள் திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக தகவல்க வெளியாகியது. இதற்கான அறிவிப்பை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். 

இந்நிலையில் விக்கி கௌஷல் மற்றும் கத்ரீனா கைஃப் நட்சத்திர ஜோடியின் திருமணம் ராஜஸ்தானின் உள்ள சவாய் மாதோபூரில் அமைந்துள்ள சிக்ஸ் சென்ஸ் கோட்டையில் நடைபெற்றது. கோலாகலமாய் மிகவும் பிரம்மாண்டமாய் நடைபெற்ற இந்த திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள் 120 பேர் மட்டுமே கலந்துக்கொண்டனர். 

 திருமணத்திற்கு பிறகு புதுமண ஜோடி, அங்குள்ள புகழ்பெற்ற சௌத் மாதா கோவிலுக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. பிரம்மாண்டமாய் நடைபெற்ற இந்த திருமணத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. விக்கி கௌஷல் - கத்ரீனா கைஃப் ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.