×

திருமணத்திற்கு பின்னரும் கவர்ச்சிக்கு தாராளம்... வைரலாகும் நடிகை கியாரா அத்வானியின் போட்டோஷூட் 

 

படுகவர்ச்சி உடையில் இருக்கும் பாலிவுட் நடிகை கியாரா அத்வானியின் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கியாரா அத்வானி . தற்போது டோலிவுட்டில் அவருக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். மிகக் குறுகிய காலத்திலேயே அதிக ரசிகர் கூட்டத்தைச் சம்பாதித்துள்ளார் கியாரா அத்வானி. அந்த வகையில் தெலுங்கு ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

இந்தியில் ‘லஸ்ட் ஸ்டோரி’ என்ற ஆந்தாலஜி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதில் சுய இன்பம் அனுபவிக்கும் பெண்ணாக நடித்து ரசிகர்களை சூடாக்கினார். அதன்பிறகு கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். 

இதையடுத்து சமீபத்தில் பாலிவுட் இளம் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். சோஷியல் மீடியாக்களில் தொடர்ந்து கிளாமர் போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வருவது வழக்கம். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு உச்சக்கட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.