×

அடித்துகொன்று மூட்டையாக ஆற்றில் வீசப்பட்ட பிரபல நடிகை – மிரளவைத்த  காரணம்:

 

மும்பையில் பிரபல நடிகையின் கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழம்பெரும் பாலிவுட் நடிகை வீணா கபூர் 70களில் பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார். வீணா கபூருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவரது ஒருமகன் அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிகிறார், வீணா தனது மற்றுமொரு மகன் சச்சினுடன் மும்பை ஜூஹூவில் வசித்து வந்தார்.வயது முதுமை காரணமாக அவர் வீட்டிலேயே  ஓய்வெடுத்துக் வந்துள்ளார்.

இந்தநிலையில் வீணாவிடன் வசித்து வந்த மகன் சச்சின் அடிக்கடி தாயிடம் செத்து தகறாறில் ஈடுவடுவார் என சொல்லப்படுகிறது, சம்பவம் நடந்த அன்றும் கூட அவர் தகறாறில் ஈடுபட்டுளார், ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த மகன் தாய் என்றும் கூட பாராமல் அடித்துக் கொலை செய்து, பிணத்தை 90 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆற்றில் தூக்கி வீசியுள்ளார்.

இந்தநிலையில் வீணாவை கடந்த சில நாட்களாக காணவிலை என அவர் குடியிருப்பின் பாதுகாவலர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார், தொடர்ந்து விசாரணை நடத்திய காவலர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது, அதாவது வீணாவை அவரது சொந்த மகனே செத்துக்காக கொலை செய்தது தெரியவந்தது, போலீசாரின் விசாரணையில் சச்சின் கூறியதாவது  "எனது தாயின் பெயரில் இருக்கும் 12 கோடி மதிப்புடைய வீட்டை விற்று பணம் தரும்படி கூறினேன், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார், இதனால் அவருக்கும் எனக்கு வாக்குவாதம் ஏற்பட்டது  ஒருகட்டத்தில், ஆத்திரத்தில் பேஸ்பால் மட்டையால் அவரை பலமுறை தாக்கினேன் இதனால் அவர் உயிரிழந்து விட்டார். அவரது உடலை மும்பையில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாதேரன் ஆற்றில் மூட்டை கட்டி வீசினேன் இதனை நானும் எங்கள் வீட்டின் வேலைக்காரன் சோட்டும் சேர்ந்து செய்தோம்” என கூறியுள்ளார். தொடர்ந்து போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.


இவரது மறைவிற்கு ரசிகர்கள், திரைதுறை பிரபலங்கள், சக நடிகர்கள் என பலருமே இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.