×

போபால் விஷவாயு சம்பவம்: மாதவன் நடிக்கும் ‘தி ரயில்வே மென்’ வெப் சீரிஸ்.

 

போபால் விஷவாயு கசிவை மைய்யமாக வைத்து உருவாகும் வெப் தொடர் ‘தி ரயில்வே மென்’. கடந்த 1984ஆம் ஆண்டு டிசம்பர் மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் ஆலையிலிருந்து ‘மெத்தில் ஐசோசயனேட்’ என்ற விஷ வாயு வெளியாறியது. இந்த விபத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர், மேலும் பலர் உடல் நல கோளாறால் அவதிப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதுமட்டுமலாமல் உலகில் நடந்த மிகப்பெரிய தொழிற்சாலை பேரழிவாக இது கருதப்படுகிறது.

இந்த சம்பவத்தை மைய்யபடுத்தி ‘தி ரயில்வே மென்’ என்ற வெப் தொடர் தயாராகிவருகிறது. அதில் நடிகர் மாதவன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த விபத்தின் போது போபால் ரயில் நிலைய ஊழியர் ஒருவர் நூற்றுக்கணக்கான மக்களில் உயிரை காப்பாற்றியுள்ளார். அதனால் தான் இந்த தொடருக்கு ரயில்வெ மென் என பெயரிட்டுள்ளனர். இந்த தொடர் வரும் நவம்பர் மாதம் 18ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.