விஜய் தேவரகொண்டா மற்றும் ஜான்வி கபூர் கூட்டணியில் புதிய படம்!?
விஜய் தேவரகொண்டா மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் புதிய படம் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
'ஃகாபி வித் கரன்' நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் விஜய் தேவரகொண்டா பற்றி பேசி அவரை இந்தி ரசிகர்களிடம் பிரபலமாக்கினார். அதையடுத்து இயக்குனர் பூரி ஜெகந்நாத் 'லைகர்' படத்தில் நடிக்க வைக்க முயன்றார். ஆனால் அது நடக்கவில்லை. தற்போது பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவர்கொண்டா நடிக்கும் இரண்டாவது படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
பூரி ஜெகந்நாத் மற்றும் விஜய் தேவரகொண்டா கூட்டணியில் லைகர் திரைப்படம் உருவாகி வருகிறது. அந்தப் படத்தை அடுத்து இருவரும் மீண்டும் கூட்டணி வைக்க அமைக்க இருப்பதாகவும் அந்தப் படம் உடனே படம் துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த படத்தில்தான் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறாராம்.
அந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் லைகர் படத்திற்கு இந்திய அளவில் மிகப் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச் சண்டை வீரராக நடித்துள்ளார். பிரபல சர்வதேச குத்துச்சண்டை வீரர் மைக் டைசனும் அந்தப் படத்தில் நடித்திருப்பதால் படத்துக்கு இமாலய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.