இந்தியாவைச் சேர்ந்த பிரபல பாகிஸ்தான் பாடகி நய்யரா நூர் மறைவு!
பிரபல பாகிஸ்தானிய பாடகி நய்யாரா நூர் காலமானார். அவருக்கு வயது 71.
1950-ம் ஆண்டு அஸ்ஸாமின் குவஹாத்தியில் பிறந்த நய்யாரா நூர் சிறுவயதிலிருந்தே பேகம் அக்தர் கசல்ஸ், தும்ரிஸ் மற்றும் கானன் தேவி பஜன்களை விரும்பினார். அவருக்கு 7 வயதாக இருந்தபோது அவருடைய குடும்பம் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தனர்.
பின்னர் அவர் பாகிஸ்தானில் பிரபல பாடகியாக உருவெடுத்தார். நயீரா நூர் எதைப் பாடினாலும், அதை அவர் கச்சிதமாகப் பாடினார். 1973 இல் சிறந்த பின்னணி பாடகருக்கான நிகர் விருது வழங்கப்பட்டது. அவருக்கு 'புல்புல்-இ-பாகிஸ்தான்' என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலமானார். அவரது மறைவு பாகிஸ்தான் மக்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
"அது கஜல் ஆகட்டும் அல்லது பாடலாகட்டும், நயீரா நூரின் மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தை ஒருபோதும் நிரப்ப முடியாது" என்று பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.