×

பிரபல பாலிவுட் நடிகைக்கு அம்மாவாகும் சமந்தா... இதென்ன புது ட்விஸ்ட் !

 

பிரபல நடிகையான பிரியங்கா சோப்ராவிற்கு அம்மாவாக நடிகை சமந்தா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆங்கிலத்தில் ரூஸ்சோ சகோதரர்கள் இயக்கிய ‘சிட்டாடெல்’ என்ற வெப் தொடர் மிகவும் பிரபலமானது. இந்த தொடர் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ‘தி ஃபேமிலி மேன்' வெப் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இந்த வெப் தொடரை இயக்கி வருகின்றனர். 

இ‌ந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடிக்கிறார். சமந்தாவுடன் இணைந்து இந்த வெப் தொடரில் பாலிவுட் நடிகர் வருண் தவானும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த தொடரில் ப்ரியங்கா சோப்ரா கதாபாத்திரத்திற்கு அம்மாவாக நடிகை சமந்தா நடிக்கவுள்ளாராம். இதை சமந்தாவும் உறுதிப்படுத்தியுள்ளார். 

இந்த வெப் தொடரில் 80 மற்றும் 90-களின் ப்ளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. அதில் சமந்தா மற்றும் வருண் தவான் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்த காட்சிகளின் ஷூட்டிங்கிற்காக நடிகை சமந்தா செர்பியா செல்லவுள்ளார். கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் இந்த படப்பிடிப்பு நடைபெற உள்ளது.