‘அஜித் பட ரீமேக்கில் கலாச்சார இழிவா!….’ - பொங்கி எழுந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்.
நடிகர் அஜித் நடித்து மாஸ் ஹிட்டான திரைப்படம் ‘வீரம்’ இந்த திரைப்படம். சிறுத்தை சிவா இயக்கிய இந்த திரைப்படம் அண்ணன் தம்பி பாசத்தை மையமாக வைத்து வெளியான இந்த திரைப்படம் தமிழைக்கடந்து தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் 'கட்டமராயுடு' என்ற பெயரிலும், கன்னடத்தில் தர்ஷன் நடிப்பில் 'ஒடியா' என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல், இந்தியிலும் சல்மான் கான் நடிப்பில் ‘கிசி கா பாய் கிசி கி ஜான்;’ என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் படத்தின் டீசர் மற்றும் என்ட்டம்மா வீடியோ பாடல் வெளியான நிலையில். அந்த பாடல் சர்சையில் சிக்கியுள்ளது. அதாவது பாடலில் சல்மான் கான், வெங்கடேஷ், பூஜா ஹெக்டே மற்றும் தெலுங்கின் முன்னணி நடிகரான ராம்சரண் இணைந்து வேற ஸ்டெப் போட்டு நடனமாடியிருந்தனர் குறிப்பாக தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக வேட்டி சட்டையுடன் நடனமாடியிருந்தனர். ஆனால் பாடலில் நடன அமைப்பு கொச்சையாக இருப்பதாகவும் தமிழ் கலாச்சாரத்தை அவமதித்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தொடர்ந்து பலரும் கண்டனங்களையும், கருத்துகளையும் பதிவு செய்துவரும் நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், தென்னிந்திய கலாச்சாரத்தை இழிவுபடுத்தக் கூடிய இந்த செயல் கண்டனத்திற்குரியது, இது லுங்கி இல்லை. வேட்டி. பெருமைக்குரிய உடையை கேவலமான முறையில் காட்டியுள்ளனர் என்று காட்டமாக கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.