×

ஜூனியர் என்டிஆருடன் நடிக்க வெறித்தனமாக காத்திருக்கிறேன்... நடிகை தீபிகா படுகோன்!

 

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், பிரபாஸ் நடிப்பில் உருவாக இருக்கும் ப்ராஜெக்ட் கே படத்தின் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார். இந்த சயின்ஸ் பிக்ஷன் படத்தை நாக் ஷாவின் இயக்குகிறார்.

தற்போது தீபிகா கெஹ்ரையன் என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ளார். ஷகுன் பத்ரா இயக்கிய, கெஹ்ரையானில் சித்தாந்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே மற்றும் தைரிய கர்வா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அந்தப் படம் தற்போது அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களாக தீபிகா படத்தின் புரமோஷன் வேலைகளில் தீவிரமாக இருந்தார். அப்போது தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆரின் வெறித்தனமான ரசிகையாக மாறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

கடந்த நாட்களில் பல சந்தர்ப்பங்களில், தென்னிந்திய பாடல்களைக் கேட்க விரும்பியதாகத் தெரிவித்தார். சாம்பார் தனக்குப் பிடித்தமான உணவு என்பதையும் வெளிப்படுத்தினார்.

தெலுங்கு சினிமாவில் யாருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது, ​​தீபிகா இரண்டு பெயர்களைக் கூறினார்.

"நான் இந்த பெயர்களைச் சொல்லும் போது இது மக்களிடையே கலவரத்தை உருவாக்காது என்று நான் நம்புகிறேன். ஜூனியர் என்டிஆர் மற்றும் அல்லு அர்ஜுனுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். இந்த நேரத்தில் ஜூனியர் என்டிஆரின் வெறித்தனமான ரசிகையாக இருக்கிறேன். அபாரமான ஆளுமை பெற்றவர் அவர். மேலும் அல்லு அர்ஜுனுடனும் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.