×

தீபிகா படுகோனே ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

2007 ம் ஆண்டு ஃபரா கான் குந்தர் இயக்கத்தில் பாலிவுட்டில் வெளியான திரைப்படம் ‘ஓம் ஷாந்தி ஓம்’ .இந்த திரைப்படத்தில் ‘சாந்தி ப்ரியா’ என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் தான் நடிகை தீபிகா படுகோனே. இந்த திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருகானுக்கு ஜோடியாக நடித்திருப்பார். அறிமுக நாயகியாக இருந்தாலும் பலகோடி மக்களை கவர்ந்து தனக்கென ஒரு பெயரை நிலைநாட்டினார் தீபிகா. இந்த திரைப்படம் சூப்பர் ஹிட்டாகாகவே தீபிகாவுக்கு அடுத்தடுத்து கால்ஷீட்டுகள் குவிந்தன. மேலும் பாலிவுட் படங்களுக்கு வெளிநாடுகளில்
 

2007 ம் ஆண்டு ஃபரா கான் குந்தர் இயக்கத்தில் பாலிவுட்டில் வெளியான திரைப்படம் ‘ஓம் ஷாந்தி ஓம்’ .இந்த திரைப்படத்தில் ‘சாந்தி ப்ரியா’ என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் தான் நடிகை தீபிகா படுகோனே.

இந்த திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருகானுக்கு ஜோடியாக நடித்திருப்பார். அறிமுக நாயகியாக இருந்தாலும் பலகோடி மக்களை கவர்ந்து தனக்கென ஒரு பெயரை நிலைநாட்டினார் தீபிகா. இந்த திரைப்படம் சூப்பர் ஹிட்டாகாகவே தீபிகாவுக்கு அடுத்தடுத்து கால்ஷீட்டுகள் குவிந்தன.

மேலும் பாலிவுட் படங்களுக்கு வெளிநாடுகளில் நல்ல மவுசு என்பதால் நடிகைகள் பலரும் தங்களுக்கு அதிக சம்பளம் வேண்டும் என டிமாண்ட் செய்து வருகின்றனர்.அந்த வரிசையில் நடிகை தீபிகா படுகோனே தன்னுடைய சம்பளத்தை ரூ.15 கோடியாக உயர்த்தி உள்ளார்.

தமிழ் நடிகைகளில் நயன்தாரா உச்சத்தில் இருப்பதைப்போன்று ஹிந்தியில் தீபிகா படுகோனே மாஸ் ஹீரோயின் வரிசையில் முதன்மை பெற்றுள்ளார்.இதனால் அவருக்கு 15 கோடி ருபாய் சம்பளம் கொடுப்பதில் தயாரிப்பாளர்களுக்கு பெரிய நஷ்டம் ஒன்றும் ஏற்பட வாய்ப்பில்லை.

தீபிகா தற்போது ஷாருக்கான் நடிக்கும் பதான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். இதில் நடிக்க அவருக்கு ரூ.15 கோடி சம்பளம் பேசி இருப்பதாக கூறப்படுகிறது.