×

ஷாருக்கானிடம் நெருக்கம் கட்டும் தீபிகா – சர்ச்சையான வைரல் போஸ்ட்.

 

நடிகை தீபிகா படுகோன், ஷாருக்கானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்ட  நிலையில் ரசிகர்களை அதனை சர்ச்சையாக்கி வருகின்றனர்.

ஷாருக்கான் , அட்லீ கூட்டணியில் வெளியான படம் ‘ஜவான்’ இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் பட்டையை கிளப்பி வருகிறது. இது வரை  700 கோடி வசூலித்து சாதனை படத்துள்ளது. தொடர்ந்து விரைவில் 1000 கோடி கிளிப்பில் இணையும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

அட்லீ, நயன்தாரா மற்றும் அனிருத்துக்கு பாலிவுட்டில் இது முதல் படம். படத்தில் யோகிபாபு, பிரியாமணி, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி என பலரும் நடித்தஜவான்’  படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக வெற்றி விழா மும்பையில் நேற்று நடந்தது. அதில் ‘ஜவான்’ படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர், குறிப்பாக தீபிகா படுகோன் வெள்ளை நிற புடவையில் ஏஞ்ஜல் போல காட்சி கொடுத்தார். தொடர்ந்து அந்நிகழ்ச்சியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டார். அதில் ஷாருக்கனுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் இடம்பெற்றிருப்பதை பார்த்த ரசிகர்கள் படத்தை தாண்டி ரொமான்ஸ் அதிகமாக உள்ளது, ஓவர் நெருக்கமா இருக்கே?.... என்பது போன்ற கமெண்டுகளை பதிவிட்டு சர்சையாக்கி வருகின்றனர்.