×

 தனுஷின் ‘அத்ரங்கி ரே’ படத்தின் டிரெய்லர் வெளியீடு.. ரசிகர்கள் வரவேற்பு !

 

தனுஷின் ‘அத்ரங்கி ரே’ படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

 தமிழின் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது தனது மூன்றாவது பாலிவுட் படத்தில் நடித்துள்ளார். ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ‘அத்ரங்கி ரே’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில், அக்‌ஷய் குமார்,  தனுஷ், சாரா அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டி-சீரிஸ் நிறுவனம் வழங்க கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு டெல்லி, ஆக்ரா, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. தயாரிப்பு பணிகள் முடிந்துள்ள இப்படம் ரிலீசு தயாராகியுள்ளது. 

இப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளதாக சமீபத்தில் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரெய்லரில் தனுஷின் நடிப்பு பாராட்டும் வகையில் உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.