மாஸ் காட்டும் லுக்கில் தனுஷ்... அடுத்த இந்தி படத்தின் அறிவிப்பு !
ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அடுத்த பாலிவுட் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பல மொழிகளில் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்திற்கு பிறகு ‘D50’ படத்திலும், தெலுங்கில் சேகர் கமுலா படத்திலும் நடிக்கவிருக்கிறார்.
இதற்கிடையே ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ‘ராஞ்சனா’ படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். அதன்பிறகு இரண்டாவது முறையாக அவருடைய இயக்கத்திலே ‘அட்ரங்கி ரே’ படத்தில் நடித்தார். இந்த படம் பாலிவுட்டில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக தனுஷ் - ஆனந்த் எல்.ராய் கூட்டணி இணைந்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் ப்ரோமோ ஷூட்டிற்காக நடிகர் தனுஷ் மும்பை சென்றிருந்தார். இந்நிலையில் இந்த கூட்டணியில் உருவாகும் படத்தின் தலைப்பு மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை தனுஷ் வெளியிட்டுள்ளார்.
அதன்படி இந்த படத்திற்கு ‘தெரே ஷ்க் மெய்ன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டைட்டில் அறிவிப்பையொட்டி வெளியாகியுள்ள கிளிம்ப்ஸ் வீடியோவில் வாயில் சிகரெட்டுடன் மாஸான லுக்கில் தனுஷ் இருக்கும் வீடியோ காட்சி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இமான்ஷு சர்மா தயாரிப்பில் உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஷால் சின்ஹா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.