×

பாலிவுட் படமான ”அட்ராங்கி ரே ” படப்பிடிப்பை முடித்த நடிகர் தனுஷ் !

பாலிவுட் திரைப்படமான அட்ராங்கி ரே படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நடைபெற்ற நிலையில் , படத்தில் தனுஷின் பகுதிகள் முடிவுக்கு வந்தன. இத்திரைப்படத்தை தனுஷ் ஹிந்தியில் நடித்து வெளியான ராஞ்சனா படத்தின் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்குகிறார். மேலும் இப்படத்தில் அக்ஷய் குமார் மற்றும் சாரா அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கொரோனா காலகட்டத்தால் தள்ளிப்போன படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் தொடங்கி மதுரையில் நடைபெற்றது .
 

பாலிவுட் திரைப்படமான அட்ராங்கி ரே படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நடைபெற்ற நிலையில் , படத்தில் தனுஷின் பகுதிகள் முடிவுக்கு வந்தன.

இத்திரைப்படத்தை தனுஷ் ஹிந்தியில் நடித்து வெளியான ராஞ்சனா படத்தின் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்குகிறார். மேலும் இப்படத்தில் அக்‌ஷய் குமார் மற்றும் சாரா அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கொரோனா காலகட்டத்தால் தள்ளிப்போன படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் தொடங்கி மதுரையில் நடைபெற்றது . அதனை தொடர்ந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு டெல்லி ,மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றது.

தற்போது நடிகர் தனுஷின் படப்பிடிப்பு பகுதிகள் நிறைவடைந்த நிலையில் அக்ஷய் குமார் மற்றும் சாரா அலிகானின் படப்பிடிப்பு பகுதிகள் 2021 மார்ச் மாதத்தில் ஏழு நாட்கள் வீதம் நடைபெறவுள்ளன.

நடிகர் தனுஷ் அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் d44 படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.