×

பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் கோலி காலமானார்.

 

பாலிவுட்டின் பழம்பெரும் மற்றும் பிரபல இயக்குநரான ராஜ்குமார்  கோலி வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 93.

1973ஆம் ஆண்டு கஹானி கம் சப் கி எனும் படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்குமார் கோலி. தொடர்ந்து இவர் முக்காபுலா, ஜானி துஷ்மன்வ் விரோதி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் இந்தி மட்டுமல்லாமல் குஜராத்தி மொழி படங்களையும் இயக்கியுள்ளார். இவரது மகன்தான் பிரபல நடிகர் அர்மான் கோலி. வயது மூப்பு காரணமாக சுமார் 20ஆண்டுகளுக்கு முன்பே சினிமாவை விட்டு விலகிய இயக்குநர் ராஜ்குமார் கோலி, தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் அவர் வயது மூப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். தொடர்ந்து அவரது இறப்பிற்கு திரைத்துறையை சார்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.