×

மிரட்டலாக இந்தியில் உருவாகியுள்ள ‘த்ரிஷ்யம் 2’... ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

 

இந்தியில் உருவாகியுள்ள ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மலையாளத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவான திரைப்படம் ‘த்ரிஷ்யம்’. ஒரு உயர் போலீஸ் அதிகாரியின் மகன் கொலை வழக்கிலிருந்து தன் குடும்பத்தைக் காக்க போராடும் ஒரு சாதாரண மனிதனின் அசாத்தியான மதிநுட்பம்தான் இந்த படம். 

பார்வையாளர்களை சீட் நுனியில் உட்கார வைத்தது இப்படம் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பை அதிகரிக்கச் செய்ததது.  இந்திய சினிமாவையே திருப்பி பார்க்க வைத்த இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளில் ரீமேக்கானது. மலையாளத்தை போன்று மற்ற மொழிகளிலும் இப்படம் சூப்பர் ஹிட்டடித்தது. 

மலையாளத்தில் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகி கடந்த ஆண்டு வெளியானது. இந்த படமும் நல்ல விமர்சனங்களை பெற தற்போது ‘த்ரிஷ்யம் 2’ இந்தியில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அஜய் தேவ்கன், தபு, மிரணாள் ஜாதவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

அபிஷேக் பதாக் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் வரும் நவம்பர் 18-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதோடு இப்படத்தின் டீசர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.