இந்தியிலும் ரீமேக் ஆகும் ‘திரிஷ்யம் 2’… அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!
‘த்ரிஷ்யம் 2’ திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .
2013-ம் ஆண்டு இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா ஆகியோர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘த்ரிஷ்யம்‘ திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து இந்தப் படம் இந்தியாவின் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஹிட் ஆனது. சிங்களம், சீன மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு சாதனை படைத்தது.
பின்னர் 8 ஆண்டுகளுக்குப் பிறகு த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது இரண்டாம் பாகமும் தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழில் ரீமேக் ஆகி வருகிறது.
த்ரிஷ்யம் இரண்டாம் பாகம் இந்தியிலும் ரீமேக் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. த்ரிஷ்யம் முதல் பாகத்தின் இந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கன், ஷ்ரேயா மற்றும் தபு ஆகியோர் நடித்திருந்தனர்.
தற்போது பனோரமா ஸ்டூடியோஸ் நிறுவனம் இரண்டாம் பாகத்தின் ரீமேக் உரிமைகளைக் கைப்பற்றியுள்ளனர். படம் குறித்த கூடுதல் அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.