×

இந்தியில் ரீமேக்காகும் 'திரிஷ்யம் 2'... படப்பிடிப்பு தொடங்கியது !

 

'திரிஷ்யம் 2' இந்தி ரீமேக்கில் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. 

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ‘திரிஷ்யம்’. ஜீத்து ஜோசப் இயக்கிய இப்படத்தில் மோகன் லால், மீனா இணைந்து நடித்திருந்தனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘திரிஷ்யம் 2’ படமும் மாபெரும் வெற்றிப் பெற்றுள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் பலமொழிகளிலும் ரீமேக்காகி வெற்றிப்பெற்றது.

இதையடுத்து தற்போது இரண்டாம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து பலமொழிகளில் ரீமேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய இருமொழிகளில் ரீமேக்காகியுள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது இந்தியிலும் ரீமேக்காக இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

இந்தியின் உரிமையை பனோரமா ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றி தயாரித்து வருகிறது. அபிஷேக் பதக் இயக்கும் இப்படத்தில் மோகன்லால் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கனும், மீனா கதாபாத்திரத்தில் ஸ்ரேயாவும், போலீஸ் அதிகாரியாக தபுவும் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் அஜய் தேவ்கன் மற்றும் ஸ்ரேயா நடித்து வரும் புகைப்படம் ஒன்றும் வெளியாகி இதை உறுதிப்படுத்தியுள்ளது.