×

விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி.. ஐஸ்வர்யா ராய் செய்த செயல்!  

 

உலக அழகி என்ற பட்டத்தினை பலர் வென்றுள்ளனர். ஆனால், அந்த இடத்தை தக்கவைத்து கொண்டு இன்றும் பல மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து புகழின் உச்சத்தில் இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் அவ்வப்போது தமிழ் சினிமாவிலும் நடித்து வருகிறார். இவருடைய அழகு மற்றும் சிறந்த நடிப்பு மூலம் பல கோடி தமிழ் ரசிகர்களையும் சம்பாதித்தார். அவர் பாலிவுட் முன்னணி நடிகரான அபிஷேக் பச்சனை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தார் ஐஸ்வர்யா. நீண்ட இடைவெளிக்கு பிறகு, தமிழில் பொன்னியின் செல்வன் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில், ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் விவாகரத்து பெற போகிறார்கள் என்று அடிக்கடி சர்ச்சைகள் வந்து கொண்டிருந்த நிலையில், இதுகுறித்து ஒரு பேட்டியில் அபிஷேக் மறுத்திருந்தார். ஆனால், திருமணத்தின்போது போடப்பட்ட மோதிரம் ஐஸ்வர்யா ராயின் கைகளில் இல்லாததால் மீண்டும் இதுகுறித்து சர்ச்சை எழுந்தது. தற்போது, இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமீபத்தில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஐஸ்வர்யாவின் கைகளில் அந்த மோதிரம் இருந்திருக்கிறது. இதன்மூலம் ஐஸ்வர்யா தனக்கு விவகாரத்து எல்லாம் நடக்கவில்லை என்பதை உறுதி செய்துள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.