×

சர்ச்சை இயக்குனருடன் மீண்டும் இணைகிறாரா சமந்தா ?

 
‘பேமிலி மேன் 2’ இயக்குனரின் அடுத்த வெப் தொடரில் நடிகை சமந்தா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் கடும் எதிர்ப்புகளிடையே வெளியான வெப் தொடர் ‘தி பேமிலி மேன் 2’.  சமந்தாவின் அட்டகாசமான நடிப்பில் இத்தொடர் கடந்த மே மாதம் அமேசான் பிரைமில் வெளியானது. இந்த வெப் தொடரை இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி.கே ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.  இதில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த வெப் தொடரில் இலங்கை தமிழ் பெண்ணாக உள்ள சமந்தாவை தீவிரவாதியாக காட்டியுள்ளனர். இந்த வெப் தொடரில் சமந்தா நடித்தது ஒருபக்கம் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், மற்றொருபுறம் சமந்தாவின் நடிப்பு பாராட்டுக்கள் குவிந்தன. சமந்தாவின் பாலிவுட் என்ட்ரியாக இந்த படம் கருதப்பட்டது. 

இதையடுத்து தனது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளால் சினிமாவில் நடிப்பாரா என்று கேள்வி இருந்த நிலையில் தற்போது மீண்டும் நடிக்க களமிறங்கியுள்ளது. இந்நிலையில் பேமிலி மேன் 2 இயக்குனர்களின் புதிய வெப் தொடர் சமந்தா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடரில் முந்தைய தொடரை விட அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.