×

பிரபல பாலிவுட் பாடகர் திடீர் மரணம்.. திரையுலகினர் இரங்கல் 

 

 பிரபல பாலிவுட் பாடகரான பூபிந்தர் சிங், உடல் நலக்குறைவால் இன்று மரணமடைந்தார். 

பாலிவுட் சினிமாவில் பிரபல பாடகராக இருந்தவர் பூபிந்தர் சிங். தன் இனிமையான குரலில் ரசிகர்களை கவர்ந்த இவர், ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். அதில்  தீவானே ஷெகிர் மெய்ன், ஹோக் மஜ்பூர் முஜ்ஹே, உஸ்னே பூலயா ஹோகா, ஆனே சே உஸ்கே ஆயே பஹார், துனியா சுடே யார் நா சுடே, கிசி நாசார் கோதேரா இன்டேஜர் ஆஜ்பி  உள்ளிட்டவை மிகவும் புகழ்பெற்றவை. 

புகழ்பெற்ற பாடகராக இருந்த அவர், நீண்ட நாட்களாக பெருங்குடல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 

82 வயதாகும் பூபிந்தர் சிங்கின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பூபிந்தரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெறும் என்று குடும்பத்தினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.