×

பிரபல நடிகையின் பயோபிக்கில் சர்ச்சை நடிகை... முக்கிய அப்டேட் 

 

முன்னணி நடிகை பினோதினி வாழ்க்கை வரலாற்று படத்தில் பிரபல நடிகை நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ள அவர், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கங்கனாவுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. 

இதையடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களிலும் மட்டுமே தற்போது நடித்து வருகிறார். அதேபோன்று வாழ்க்கை வரலாற்று திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் புகழ்பெற்ற நாடக நடிகையான பினோதினியின் வாழ்க்கை வரலாறு, திரைப்படம் உருவாக உள்ளது. தேவதாசி குடும்பத்தை சேர்ந்த அவர், ஏராளமான நாடகங்களில் நடித்துள்ளார். மேற்கு வங்கத்தில் புகழ்பெற்ற  பினோதினியின் கதாபாத்திரத்தில் கங்கனா நடிக்க உள்ளார். 

ஏற்கனவே மணிகர்ணிகா, தலைவி, எமர்ஜென்சி ஆகிய படங்களுக்கு பிறகு கங்கனா நடிக்கும் 4வது பயோக் பிக் படமாக இப்படம் உருவாகிறது. இந்த படத்தை பரிணிதா, மர்தாணி உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரதீப் சர்க்கார் இயக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படம் குறித்து பதிவிட்டுள்ள கங்கனா, நாடு போற்றும் நடிகை பினோதினியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன். இயக்குனர் பிரதீப் சர்க்கார் திரைப்படங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகை. அவருடன் இணைந்து பணியாற்றுவது மிகழ்ச்சியான விஷயம் என்று கங்கனா குறிப்பிட்டுள்ளார்.